வானொலிமுதல் தாய்மைவரை: என் தமிழ்ப் பயணம்
From Radio to Motherhood: My Tamil Journey

Mrs Nithiyia Rao
திருமதி நித்தியா ராவ்
மீடியாகார்ப் ஒலி 968 படைப்பாளர்
தன்விவரம்
திருமதி நித்தியா 2011-ஆம் ஆண்டில் தம் ஊடகப் பயணத்தைத் தொடங்கினார். இன்று இவர் விருது பெற்ற உள்ளூர் நடிகையாகவும், தொகுப்பாளராகவும், படைப்பாளராகவும் புகழ்பெற்று விளங்குகிறார். தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் படைப்புகளில் நடித்துள்ளார்.
2023-இல் திருமதி நித்தியா மீடியாகார்ப் ‘ஒலி 968’-ல் வானொலித் தயாரிப்பாளராகவும் படைப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். இந்திய சமூகத்தைச் சேர்ந்த தமது நேயர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சிறந்த தொகுப்புகளை வழங்குவதே அவரின் இலட்சியமாகும்.
திருமதி நித்தியாவின் வானொலிப் பயணம், தமிழ்மொழியுடனான அவரது உறவை மட்டுமன்றி, இன்று அவர் தாய்மையை அணுகும் விதத்தையும் மாற்றியமைத்துள்ளது. கதைகள், இசை, பண்பாட்டு அனுபவங்கள் வழியாக வீட்டில் ஏதுவான தமிழ்ப் பேசும் சூழலை உருவாக்குவதில் அவர் உறுதியாகச் செயற்பட்டு வருகிறார். குடும்ப வாழ்க்கையில் மொழிப் பாதுகாப்பு அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமையலாம் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
Profile
Mrs Nithiyia is an award-winning Singaporean actress, host, and media personality who began her career in 2011 and has since appeared in over 40 productions in Tamil, English, and Malay across film and television. In 2023, she embarked on a new chapter as a producer and presenter on Oli 968. Mrs Nithiyia aspires to bring the best in entertainment to her listeners and viewers from the Indian community.
After becoming a mother, Mrs Nithiyia's career in Tamil radio broadcasting deeply transformed her relationship with the language and her approach to motherhood. She is committed to creating natural Tamil-speaking spaces at home, through stories, music, and cultural experiences, believing that language preservation can be meaningful and joyful within family life.
சுருக்கவுரை
இந்தப் பகிர்வில் சிங்கப்பூரில் பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் சூழலில், ஒரு குழந்தையை வளர்க்கும் இளம் தாயாக, வீட்டில் தமிழில் பேசுவதன் முக்கியத்துத்தையும், அதனுடன் தொடர்புடைய சவால்களையும், விழிப்புணர்வுடன் மேற்கொண்ட முயற்சிகளையும் அன்றாட வாழ்க்கையில் உருவாக்கிய சிறிய மாற்றங்களையும் பற்றித் திருமதி நித்யா பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
கதைகள், இசை, உரையாடல்கள், பண்பாட்டு அனுபவங்கள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றின்மூலம், குழந்தைகள் இயல்பாகத் தமிழைக் கேட்டுப் பேசும் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வானொலியில் கிடைத்த அனுபவங்கள் வாயிலாக அவர் பகிர்ந்துகொள்வார். நவீனச் சிங்கப்பூர் வாழ்க்கையின் எதார்த்தங்களைச் சமநிலைப்படுத்திக்கொண்டு, தமிழில் குழந்தைகளைப் பேச வைக்க முயலும் பெற்றோர்களுக்கு இப்பகிர்வு நம்பிக்கையையும், உத்வேகத்தையும், நடைமுறை யோசனைகளையும் வழங்கும் எனத் திருமதி நித்யா நம்புகிறார்.
Synopsis
This sharing session by Mrs Nithiyia is a personal reflection on the struggles, continual conscious efforts, and small everyday routines involved in keeping Tamil alive and relevant at home while raising a child in Singapore's largely English-speaking environment.
She will also be sharing how her experiences in radio opened her eyes to the importance of creating immersive and natural Tamil-speaking spaces for children, whether through stories, music, conversations, cultural experiences, or community programmes. She hopes to offer parents reassurance, inspiration, and practical ideas that show them how language preservation can be meaningful, joyful, and deeply woven into family life.
