இனிய தமிழை இன்புறக் கற்போம்
Learning Tamil with Joy and Love

Mdm Seethalaksmy

Mdm Tamilvani Muthu

Mrs Arulmathi Lenin
Mdm Seethalaksmy
திருவாட்டி சீதாலட்சுமி
வழிகாட்டு சிறப்பாய்வாளர்
Mdm Tamilvani Muthu
திருவாட்டி தமிழ்வாணி முத்து
மூத்த சிறப்பாய்வாளர்
Mrs Arulmathi Lenin
திருமதி அருள்மதி இலெனின்
மூத்த சிறப்பாய்வாளர்
பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு
கல்வி அமைச்சு, சிங்கப்பூர்
Curriculum Planning and Development Division
Ministry of Education, Singapore
தன்விவரம்
திருவாட்டி சீதாலட்சுமி கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பகுதியில் வழிகாட்டு சிறப்பாய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தொடக்கப்பள்ளிகளுக்கான 2015, 2024 பாடத்திட்டங்களையும் 2021 உயர்நிலைப் பாடத்திட்டத்தையும் அதன் தொடர்பான பயிற்றுவளங்களையும் வடிவமைக்கும் முன்னணி அதிகாரிகளுள் ஒருவராக இருக்கிறார். உலகத் தமிழாசிரியர் மாநாடுகளிலும் பிற தளங்களிலும் தமிழ்மொழிக் கல்வி தொடர்பாகவும் பயிற்றுவளங்கள் தொடர்பாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் கல்வித்துறையில் 38 வருடக் கால அனுபவமிக்கவர். இவர் 27 ஆண்டுகள் தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
திருவாட்டி தமிழ்வாணி முத்து கல்வி அமைச்சில் மூத்த சிறப்பாய்வாளராகப் பணிபுரிகிறார். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடக்கப்பள்ளிகளுக்குரிய பாடநூல்கள், பயிற்சிநூல்கள், துணைவளங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். கல்வித்துறையில் 38 வருடக் கால அனுபவமிக்கவர். 18 ஆண்டுகள் மூன்று தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியராகவும் பாடத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கற்றல் கற்பித்தல் குறித்த கருத்தரங்கு, உலக இணைய மாநாடு முதலியவற்றில் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
திருமதி அருள்மதி இலெனின் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சில் மூத்த சிறப்பாய்வாளராகப் பணிபுரிகிறார். கல்வித்துறையில் 15 ஆண்டுகள் அனுபவமிக்கவர். உலகத் தமிழாசிரியர் மாநாட்டிலும் தமிழ் இணைய மாநாட்டிலும் கட்டுரைகள் படைத்துள்ளார். தமிழ் இலக்கண இலக்கியத்தில் ஈடுபாடுமிக்கவர்.
Profile
Mdm Seethalaksmy is a Lead Specialist at the Tamil Language Unit, Mother Tongue Languages Branch of the Curriculum Planning & Development Division 1 at the Ministry of Education, Singapore. Seethalaksmy was one of the lead officer in developing the 2015, 2024 TL Primary curriculum, 2021 Secondary Curriculum and its related teaching resources. She had the opportunities to present at the World Tamil Teacher’s Conferences on the Singapore’s Tamil Language Curriculum and conduct workshops at various platforms pertaining to the work she had been involved in the Tamil Language. She brings 38 years of experience in the education sector. She has 29 years of experiences teaching Tamil in both Secondary and Primary schools.
Mdm Tamilvani Muthu serves as a Senior Specialist at the Ministry of Education. For the past 15 years, she has been leading and guiding the team responsible for developing textbooks, workbooks, and supplementary resources for primary schools. She brings 38 years of experience in the education sector. She worked as a teacher and subject head across three primary schools for 18 years. She has authored articles for seminars on teaching and learning, as well as international online conferences.
Mrs Arulmathi Lenin works as a Senior Specialist at the Singapore Ministry of Education. She has 15 years of experience in the education sector. She has contributed articles to the World Tamil Teachers' Conference and the Tamil Internet Conference. She has a keen interest in Tamil grammar and literature.
சுருக்கவுரை
பிள்ளைகள் மொழியை மகிழ்வுறக் கற்கப் பெற்றோர் எவ்வகையில் பங்களிக்கலாம் என்பது குறித்து விளக்குவதே இப்பகிர்வின் முக்கிய நோக்கமாகும். ஒரு குழந்தையின் மொழி கற்றல் இல்லத்திலிருந்தே தொடங்குகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தமிழ்மொழி கற்றலுக்குரிய வலுவான அடித்தளத்தை இல்லத்திலேயே அமைத்துக் கொடுக்க வேண்டும். அச்சூழலை உருவாக்குவதற்குத் தேவையான பின்புல அறிவையும் வளங்களையும்பற்றிப் பெற்றோர்கள் இப்பகிர்வில் அறிந்துகொள்ளலாம். இளம்வயதிலிருந்தே பிள்ளைகளின் வாய்மொழித் திறனை மேம்படுத்துவதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துதல் அவசியம். நடைமுறை வாழ்க்கைச் சூழல்களில் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தமிழில் உரையாடச் செய்வதற்கு எத்தகைய உத்திகளைக் கையாளலாம் என்பதைப்பற்றியும் பெற்றோர்கள் இப்பகிர்வில் அறிந்துகொள்ளலாம். இளம்பருவம்முதல் கதைநூல்களைப் படிக்கும் பழக்கத்தைப் பிள்ளைகளிடம் வளர்த்தல் அவசியமானது. தமிழ்க் கதைநூல்களைப் படிப்பதால் பிள்ளைகளின் மொழித்திறன் மேம்படுவதோடு பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்துகொள்ள இயலும். படித்தல் மீதான ஈடுபாட்டைப் பிள்ளைகளிடையே அதிகரிக்கச் செய்வதற்கும் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் முறைப்படுத்தப்பட்ட வாசிப்புத் திட்டம் பள்ளிகளில் அமலாக்கம் கண்டுள்ளது. இத்திட்டம் குறித்தும் இதன்மூலம் பிள்ளைகள் பெறக்கூடிய நன்மைகள் குறித்தும் இதற்குப் பெற்றோர்கள் எவ்வகையில் ஆதரவளிக்கலாம் என்பது குறித்தும் இப்பகிர்வில் அறிந்துகொள்ளலாம்.
Synopsis
The primary goal of this sharing session is to guide parents on helping their children learn Tamil joyfully. Language learning begins at home and parents play a crucial role in building strong Tamil foundation within the family environment. This session provides essential knowledge and practical resources to create a Tamil-rich atmosphere at home. Parents will discover strategies to nurture their children's speaking skills from an early age, helping them communicate confidently in Tamil across real-life situations, from family conversations to social interactions. Cultivating reading habits during childhood is vital for language development. Reading Tamil storybooks significantly enhances children's language abilities and cultural understanding. Schools have introduced structured reading programmes to boost reading engagement. This session explains these programmes, highlights their benefits, and demonstrates how parents can effectively support and complement school initiatives at home.
