விளையாட்டுவழி வாசித்தல்: பிள்ளைகளுக்கு இன்பமான தமிழ் வாசிப்பு அனுபவங்களை உருவாக்குதல்
From Play to Pages: Making Tamil Reading Fun for Young Children

Ms Renu Siva
செல்வி ரேணு சிவா
Senior Librarian
மூத்த நூலகர்
தேசிய நூலக வாரியம்
தன்விவரம்
செல்வி ரேணு சிவா, தேசிய நூலக வாரியத்தின் நூல் சேகரிப்புப் திட்டமிடல் மேம்பாட்டுக் குழுவில் மூத்த நூலகராகப் பணியாற்றுகிறார். இவர் சிறுவர், இளையர் வாசிப்புத் நிகழ்ச்சிகளிலும் சேவைகளிலும் 13 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்தவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழி பேசம் சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் உரிய தொகுப்புகள் இவருக்கு நன்கு பரிச்சயமானவை. உள்ளடக்க மேம்பாடு, புத்தக மன்றங்கள், நூல் சேகரிப்புப் பரிந்துரைகள், சிறுவர், இளையர்களுக்கான நிகழ்ச்சிகள் முதலிய பல்வேறு திட்டங்களை இவர் வழிநடத்தி வருகிறார். சிறுவர்கள், இளையர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பினருக்கும் இவர் பகிர்வுகளையும் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார்.
Profile
Ms Renu Siva is a Senior Librarian with the Collection Planning & Development team, with over 13 years of experience in library services. She focuses on children’s and teens’ programmes, with strong expertise in English and Tamil collections. Her work includes developing reading programmes, curating content, and leading initiatives that promote reading and language use among young audiences. She has also conducted several workshops and sharing sessions for children, teens, parents, and educators, with a focus on practical strategies to support reading and language development.
சுருக்கவுரை
குழந்தைகளுக்குரிய வாசித்தல் என்பது கேட்டல், பேசுதல், கற்பனை செய்தல், விளையாடுதல் ஆகியவற்றை மையப்படுத்தியே தொடங்குகிறது. ஆரம்பக்கால எழுத்தறிவு இளம்பிள்ளைகளை ஆர்வமுள்ள வாசகர்களாகவும் வாழ்நாள் கற்றலில் ஈடுபடுபவர்களாகவும் உருவாக்குகிறது. இவற்றைக் குறித்து மூத்த நூலகரான, செல்வி ரேணு, எவ்வாறு எளிய விளையாட்டுகளின்வழி வீட்டில் தமிழ் வாசிப்பை ஊக்கப்படுத்தலாம் என்பதையொட்டிப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
பிள்ளைகள் அன்றாடம் தமிழை மகிழ்ச்சியாக வாசிக்க உதவும் வழிமுறைகளைப் பெற்றோர் இப்பகிர்வரங்கில் அறிந்துகொள்ளலாம். மேலும், பிள்ளைகளின் வயதுக்கேற்ற நூல்களைப் பரிந்துரைப்பதுடன் தேசிய நூலக வாரியத்தால் தயாரிக்கப்பட்ட தமிழ் வளங்களும் பகிர்ந்துகொள்ளப்படும்.
Synopsis
This sharing session will introduce parents to simple, play-based strategies for supporting Tamil reading at home, guided by a Senior Librarian. It will explore how early reading supports a child's language development, confidence, and readiness for learning, focusing on how young children learn through listening, speaking, imagining, and play. The session aims to empower parents with practical tools to make Tamil storybooks more interactive and enjoyable as part of their child's daily life. Additionally, the speaker will share age-appropriate book recommendations and tips for building consistent reading routines.
