மின்னூல்வழி மின்னிலக்கத் தமிழ்ச் சாகசங்கள்
Digital Tamil Adventures through E-Books

Miss Nashima Banu

Mdm Kaladevi Nadarajah

Mdm Amerah Begum
Miss Nashima Banu
செல்வி நஸிமா பானு
மூத்த ஆசிரியர் தமிழ்மொழி
கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளி
Mdm Kaladevi Nadarajah
திருவாட்டி கலாதேவி நடராஜா
ஆசிரியர்
கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளி
Mdm Amerah Begum
திருவாட்டி அமீரா பேகம்
ஆசிரியர்
கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளி
தன்விவரம்
செல்வி நஸிமா பானு, திருவாட்டி கலாதேவி நடராஜா, திருவாட்டி அமீரா பேகம் ஆகியோர் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற தமிழாசிரியர்களாவர். இவர்கள் மூவரும் மாணவர்களுக்கு அர்த்தமுள்ள மகிழ்வுறு கற்றல் அனுபவங்களை வடிவமைத்து வழங்குவதில் ஈடுபாடு கொண்டவர்கள்.
செல்வி நஸிமா பானு, கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளியில் தமிழ்மொழித் துறையின் மூத்த ஆசிரியராவார். இவர் தொழில்நுட்பத்தையும் புத்தாக்க முறைகளையும்கொண்டு மாணவர்களிடம் தமிழ்மொழிமீதுள்ள தன்னம்பிக்கையை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
திருவாட்டி கலாதேவி நடராஜா 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்மொழி ஆசிரியராகப் பணிப்புரிகிறார். இவர் மாணவர்களின் மொழி கற்றலுக்கு ஆதரவளிக்கும் புதுமையான கற்பித்தல் முறைகளையும், தொழில்நுட்பத்தையும் அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
திருவாட்டி அமீரா பேகம் 12 ஆண்டுகளாகத் தமிழ்மொழி ஆசிரியராகப் பணிப்புரிகிறார். இவர் மாணவர்களின் கற்றல் அனுபவங்களை மேம்படுத்துவதற்காக, ஆக்கபூர்வமான கற்பித்தல் அணுகுமுறைகளை ஆராய்வதிலும், தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் ஒருங்கிணைப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இந்தப் பயிலரங்கில் இவர்கள் கீழ்த்தொடக்கநிலை மாணவர்கள் உருவாக்கிய தமிழ் மின்னூல்களைப்பற்றியும் மாணவர்களின் அனுபவங்களைப்பற்றியும் பெற்றோர்களுடனும் ஆசிரியர்களுடனும் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள்.
Profile
Miss Nashima Banu, Mdm Kaladevi Nadarajah, and Mdm Amerah Begum are experienced Tamil Language educators at Casuarina Primary School, who are united by a shared passion for creating joyful, meaningful, and engaging learning experiences for young learners. Miss Nashima, a Senior Teacher for Tamil Language, brings expertise in purposefully integrating technology and innovative pedagogies to nurture students' confidence, creativity, and love for the language. Mdm Kaladevi, with over 25 years of experience, is dedicated to designing lessons that spark interest and strengthen students' communication skills through interactive strategies and digital tools. Throughout her 12 years of service, Mdm Amerah has been committed to cultivating students' confidence, curiosity, and appreciation for Tamil through creative teaching approaches and meaningful technology integration. In this workshop, they will walk participants through their lower primary pupils' Tamil e-book creations and the experiences behind them.
சுருக்கவுரை
இந்தப் பயிலரங்கு, வகுப்பில் நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் நடவடிக்கையாகக் கீழ்த்தொடக்கநிலை மாணவர்கள் சுயமாக உருவாக்கிய மின்னூல்களைக் குறித்து அமையும். மாணவர்கள் தங்களுடைய பள்ளியைச் சுற்றி எடுத்த நிழற்படங்களுடன் எளிமையான சொற்றொடர்களை இணைத்து அர்த்தமுள்ள மின்னூல்களை உருவாக்கியதைப்பற்றியும் அந்நடவடிக்கைகளை வழிகாட்டிய அனுபவங்களைப்பற்றியும் அனுபவம் வாய்ந்த மூன்று தமிழாசிரியர்கள் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள். மேலும், உருவாக்கப்பட்ட மின்னூல்கள் இருவழிக் கருத்துப்பரிமாற்றத்திற்கான கருவிகளாக எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்ளலாம். இப்பயிலரங்கில் பங்கெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து கைக்கணினிகளைக்கொண்டு (iPads) மின்னூலை உருவாக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறவர்.
Synopsis
In this interactive workshop, three experienced Tamil language teachers will share how their lower primary pupils created e-books as part of their Tamil language classroom activities — capturing their surroundings through photos taken around the school and pairing them with simple phrases to build meaningful content. They will also share their experience in guiding pupils through this process. Participants will further discover how these e-books serve as tools for two-way communication. To round off the workshop, parents will have the opportunity to learn alongside their children the e-book creation process hands-on with iPads.
