வில்லும் பாட்டும் கதைகளும்: ஒரு வில்லுப்பாட்டு அனுபவம்
Bow, Songs & Stories: A Villupaatu Experience

Mdm Rani Kanna
திருவாட்டி ராணி கண்ணா
Director, AKT Creations
நிறுவனர், ஏ கே டி கிரியேஷன்ஸ்
தன்விவரம்
திருவாட்டி ராணி கண்ணா, ஏ கே டி கிரியேஷன்ஸ், ஏ கே தியேட்டரின் இயக்குநர் ஆவார். இவர் தொழில்முனைவராகவும் பல்திறன்மிக்க கதைஞராகவும் கலைக் கல்வியாளராகவும் நடிகராகவும் வலம்வருகிறார். கற்பித்தல் அனுபவமும் தமிழ்மொழியில் இளங்கலைப் பட்டமும், பயன்பாட்டு மொழியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள இவர், கதைசொல்லல், நாடகமாக்கல்மூலம் தமிழ்மொழியை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். 2014-ஆம் ஆண்டுமுதல் பாலர்பள்ளிக்குரிய இசை நாடகங்களை இயக்கி வருகிறார். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், நூலகத் தன்னார்வலர்கள் முதலியோருக்குக் கதை சொல்லும் பட்டறைகளையும் நடத்தி வருகிறார். இவர் தம் படைப்புகளின்மூலம் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பதில் பேரார்வம் கொண்டவர்.
2011-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஏ கே டி கிரியேஷன்ஸ், கடந்த 15 ஆண்டுகளாகக் கலைகளோடு இணைந்த கல்வி முறையின்வழிப் பிள்ளைகளிடம் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் வாழ்க்கைத் திறன்களையும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளம் பிள்ளைகளிடையே நற்பண்புகளையும் திறன்களையும் விதைத்து வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அவர்களின் தன்னம்பிக்கையையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துவதே ஏ கே டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் இலக்காகும். ஏ கே டி கிரியேஷன்ஸ் பல கல்வி நிறுவனங்களுடனும் பண்பாட்டு நிறுவனங்களுடனும் இணைந்து படைப்பாற்றல்மிக்க பயிலரங்குகள், பள்ளிக் கலைநிகழ்ச்சிகள் முதலிய பல புத்தாக்கமிக்க முயற்சிகளை மேற்கொண்டு பிள்ளைகளிடம் வாழ்நாள் கற்றலின்மீதுள்ள ஆர்வத்தை வளர்க்கச் செயற்படுகிறது.
Profile
Mdm Rani Kanna, Director of AKT Creations and AK Theatre, is an entrepreneur, storyteller, arts educator, and actor. Holding a master's degree in Applied Linguistics and a background in teaching, she develops language skills through storytelling and dramatization. Since 2014, she has directed preschool musicals and conducted workshops for educators, librarians, and library volunteers, driven by a passion for promoting Tamil language and culture.
Founded in 2011, AKT Creations represents 15 years of dedicated work in language arts enrichment, focusing on imparting life skills, Tamil language and cultural heritage through arts-integrated education. The mission of AKT Creations is to present programmes that "empower the young minds and instil skills and values, while enhancing their confidence and creativity in all spheres of life." Several innovative initiatives in partnership with many academic and cultural institutions, have been launched through creative workshops and school assembly shows to foster lifelong learning for young children.
சுருக்கவுரை
வில்லும் பாட்டும் கதைகளும்: ஒரு வில்லுப்பாட்டு அனுபவம் கதைசொல்லுதலுடன் இசையும் தாளமும் இணையும்போது மொழி உயிர் பெறுகிறது. திருவாட்டி ராணியுடன் சேர்ந்து ஏ கே டி கிரியேஷன்ஸ் குழுவினர் பிள்ளைகளைக் கவரும் வண்ணம் ஓர் ஆர்வமூட்டும் பயிலரங்கை வழங்கவுள்ளனர். இந்தப் பயிலரங்கில் கதைசொல்லுதல், இசை, தாளம் ஆகியவற்றை ஒன்றிணைத்துத் தமிழர் பண்பாட்டின் வேர்களைப் பறைசாற்றும் ஓர் அற்புதமான நாட்டுப்புறக் கலை வடிவமான வில்லுப்பாட்டைப்பற்றிப் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்வார்கள்.
மேலும் மொழிக்கற்றலில் கலைகளை இணைப்பதன் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்வதோடு பாரம்பரியக் கலைகளின் வாயிலாகத் தமிழ்மொழியைக் கற்பது பிள்ளைகளுக்கு அர்த்தமுள்ள, மறக்க முடியாத கற்றல் அனுபவங்களை உருவாக்கும் என்பதைப் பெற்றோர்கள் இப்பயிலரங்கில் தெரிந்துகொள்ளலாம்.
Synopsis
Title: Bow, Songs & Stories: A Villupattu Experience
This interactive workshop by Mdm Rani and AKT Creations is sure to captivate young children through an engaging and fun-filled session. When storytelling is set to music and rhythm, language comes alive. Participants will be introduced to the rich and vibrant art of Villupattu, a traditional Tamil folk art form that weaves together music, rhythm, and storytelling in a way that is both captivating and deeply rooted in Tamil cultural heritage.
The workshop will also highlight the importance of arts infusion in language learning, giving parents a glimpse into how the integration of traditional performing arts can make Tamil learning more dynamic, meaningful, and memorable for their children.
