விளையாட்டுவழி மகிழ்வுறு தமிழ்மொழி கற்றலை வீட்டில் செயற்படுத்துதல்
Joyful Play Based Tamil Language Learning at Home

Mrs Nantheini Elangovan
திருமதி நந்தினி இளங்கோவன்
தமிழ்மொழிப் பாடத்தலைவர்
கேலாங் மெத்தடிஸ்ட் பள்ளி (தொடக்கநிலை)
தன்விவரம்
திருமதி நந்தினி இளங்கோவன், கேலாங் மெத்தடிஸ்ட் பள்ளி (தொடக்கப்பள்ளி)-இல் தமிழ்மொழிப் பாடத்தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் தமிழ்மொழி கற்பித்தலில் 26 ஆண்டுகள் அனுபவமுடையவர். கல்வி அமைச்சில் பணியாற்றிய காலத்தில் சிறுவர் கதைப்புத்தகங்களை உருவாக்குதல், கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்குரிய தமிழ்மொழிப் பாடத்திட்டத்தை உருவாக்குதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் முதலிய பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் 2019-ஆம் ஆண்டில் நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.
தம் வகுப்பறையில் விளையாட்டுவழிக் கற்பித்தல், கதை சொல்லுதல், விளையாட்டுகள், செயல்முறைச் செயற்பாடுகள் ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்மொழி கற்றல் மாணவர்களுக்கு எளிதானதாகவும் இனிமையானதாகவும் அமையுமாறு செய்து வருகிறார்.
Profile
Mrs Nantheini Elangovan is a Subject Head/Tamil Language at Geylang Methodist School (Primary), with 26 years of experience in teaching Tamil Language. Over the years, she has been involved in writing Tamil curriculum for pre-schoolers in MOE Kindergartens, training teachers, and creating storybooks for young children through her work with the Ministry. In 2019, she was recognised with the Most Inspiring Tamil Teacher Award. In her classroom, she actively explores play pedagogy, storytelling, games and hands-on activities to make Tamil learning accessible and enjoyable.
சுருக்கவுரை
இந்தப் பயிலரங்கில், கீழ்த்தொடக்கநிலைத் தமிழ்மொழி வகுப்பறையில் விளையாட்டுவழிக் கற்பித்தலை எவ்வாறு நடத்தி வருகிறார் என்பதைப்பற்றித் திருமதி நந்தினி பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். இப்பயிலரங்கில் அவர் தமது வகுப்பறை அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, விளையாட்டு என்பது மகிழ்வூட்டுவதற்காக விளையாடப்படுவது மட்டுமன்று; அது ஆரம்பக்கால மொழிக் கற்றலையும் தன்னம்பிக்கையை வளர்த்தலையும் கற்றவற்றை நினைவில் நிலைநிறுத்துதலையும் ஆதரிக்கும் அர்த்தமுள்ள அணுகுமுறை என்பதைப்பற்றிப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
தமிழ்மொழி கற்றலில் விளையாட்டை அர்த்தமுள்ள முறையில் இணைப்பதற்குரிய நடைமுறைசார்ந்த, எளிதில் செயற்படுத்தக்கூடிய உத்திகளை இப்பயிலரங்கில் அறிந்துகொள்ளலாம். மேலும், விளையாட்டுகளை விளையாடச் செய்தல், கதை சொல்லுதல், கைவினைச் செயற்பாடுகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்மொழி கற்றலை இளம் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும்வண்ணம் கொண்டு செல்வதுபற்றியும் பகிர்ந்துகொள்ளப்படும்.
தங்கள் பிள்ளையின் மொழி கற்றல் பயணத்திற்கு ஆதரவளிக்க விரும்பும் பெற்றோரும் வகுப்பறை நடைமுறைகளைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் ஆசிரியர்களும் இந்தப் பயிலரங்கின் வாயிலாகப் பயனுள்ள கருத்துகளைப் பெறுவர்; அர்த்தமுள்ள கற்றலில் ஈடுபடுவர்.
Synopsis
This interactive workshop explores play pedagogy as a powerful and meaningful approach to Tamil language learning in lower primary classrooms, going beyond mere fun to support language learning, confidence building, and retention in the early years.
Practical and easy-to-implement strategies are shared to meaningfully infuse play into Tamil language learning. Discover how games, storytelling, and hands-on activities can make Mother Tongue learning more engaging, joyful, and effective for young learners.
Whether you are a teacher looking to refresh your classroom practices or a parent keen to support your child's language journey at home, this workshop offers useful ideas and meaningful takeaways.
