விதைகள் - இளம்பருவ மகிழ்வுறு தமிழ் வாசிப்பு
Vidhaigal ('Seeds') - Joyful Tamil Language Reading in early years

Mdm Jayasutha Samuthiran
திருவாட்டி ஜெயசுதா சமுத்திரன்
Vidhaigal ('Seeds') - Joyful Tamil Language Reading in early years
விதைகள் - இளம்பருவ மகிழ்வுறு தமிழ் வாசிப்பு
நிறுவனர், முன்னணி வழிநடத்துநர், விதைகள்
தன்விவரம்
திருவாட்டி ஜெயசுதா, இளம் பிள்ளைகளுக்கிடையே தமிழ்மொழிப் புழக்கத்தை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வங்கொண்டவர். இவர் ஏப்ரல் 2025-இல், சிங்கப்பூரில் பயிலும் மழலையர்களுக்கும் பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இரு வாரத்திற்கு ஒரு முறை இலவசமாக நடத்தப்படும் தமிழ் கற்றல் சமூகமான "விதைகள்" என்ற அமைப்பை நிறுவினார். இன்று, ஒவ்வொரு விதைகள் நிகழ்ச்சிகளிலும் சுமார் அறுபதிலிருந்து எழுபது இளம் பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டு மகிழ்கின்றனர். அர்ப்பணிப்புமிக்க தொண்டூழியர்களின் ஆதரவுடன் 420 இளம் பிள்ளைகளைக் கண்டுள்ள ஒரு செழிப்பான வலையமைப்பாக ‘விதைகள்’ வளர்ந்துள்ளது.
இருமொழி ஆற்றல் கொண்ட திருவாட்டி ஜெயசுதா, ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நெறியாளராகவும், தொலைக்காட்சிப் பிரபலமாகவும் திகழ்கிறார். மேலும், இவர் நிறப் பாகுபாடு குறித்த ஒரு சிறுவர் புத்தகத்தின் ஆசிரியராவார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவருக்கு, அவரது குழந்தைகள் தினமும் உத்வேகம் அளிக்கின்றனர்.
Profile
Ms Jayasutha is a passionate champion of Tamil language fluency in young children. In April 2025, she founded Vidhaigal, a free fortnightly Tamil early learning community for preschoolers and toddlers in Singapore. Today, it engages 60–70 children every fortnight and has grown to a thriving network of 420 children, supported by dedicated volunteers.
Bilingual in English and Tamil, she is also an emcee, moderator, TV personality, and author of a children’s book on colourism. She is also an intercultural advocate promoting deeper understanding across cultures in Singapore. A mother of two, her children inspire her daily.
சுருக்கவுரை
ஓர் எளிய கதையை மழலையரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் நினைவில் நிற்கும் வகையிலும் படைக்கும் இந்த ‘விதைகள்’ பயிலரங்கைத் திருவாட்டி ஜெயசுதா வழிநடத்தவுள்ளார். மகிழ்வூட்டும் அனுபவங்களின்வழி இப்பயிலரங்கு இளம் பிள்ளைகளைத் தமிழின்பால் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிலரங்கில் விதைக்கப்படும் சொற்களையும் செவிமடுக்கும் மெட்டுகளையும் மழலையர் திரும்பத் திரும்பச் சொல்வதையும் பாடுவதையும் கேட்டு மகிழுங்கள்!
Synopsis
This interactive workshop brings to life a simple story in an immersive and engaging way, making Tamil language learning memorable for preschoolers. It aims to seed the Tamil language in young children through fun and interactive experiences, keeping them repeating tunes and words they learn for weeks to come!
